கவிதைமணி

 என் ஓட்டம் என் இலக்கு:   கவிஞர் " இளவல் " ஹரிஹரன்,

கவிதைமணி

இலக்கில்லாப் பயணங்கள் பயனே இல்லை
      எய்கின்ற அம்புக்கும் இலக்கு தேவை
உலகினிலே ஒவ்வொருவு யிர்க்கும்  நோக்கம்
     உண்டென்று சொன்னாலே மறுப்பார் உண்டோ
மலருக்கும் மணம்வீசி மகிழ வைத்து
    மங்கையர்தம்  கூந்தலேறும் நோக்க முண்டு
நிலவுலகில் மனிதர்க்கோ இலக்கு வேண்டும்
    நின்றிடாது அதைநோக்கி யோட வேண்டும்.

என்இலக்கு எதைநோக்கி என்னும் போக்கில்
    எள்ளளவும் பிசகிடாத தெளிவு வேண்டும்
முன்னோக்கிச் செல்கின்ற பார்வை வேண்டும்
     முப்போதும் அதிற்கவனம் செலுத்த வேண்டும்
நன்னோக்கம் இலக்கிற்கு நாளும் வேண்டும்
      நம்வாழ்வின் வெற்றிக்குச் சேர வேண்டும்.
இந்நோக்கில் இலக்கடையும் ஓட்டம் வேண்டும்
      இடைவிடாத சிந்தையதிற் காட்ட வேண்டும்.

வெள்ளோட்டம் விடுவதற்கு வேடிக் கையா
       வீணாகத் திரிவதிலே வாடிக் கையா
துள்ளாட்டம் போட்டுவாழ்க்கை தீரு மட்டும்
       துயராட்டம் வாழ்வதென்ன வாழ்க்கை யா சொல்!
தள்ளாடும் முதுமையினை அடையு முன்னம்
       தனித்துநிற்கும் பிறவியென அடையா ளத்தை
உள்ளோடும் நோக்கமென உறுதி கொள்வாய்
        ஓடு!ஓடு! அதைநோக்கி வெற்றி காண்பாய்!             

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT